
பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் இடத்தை நிரப்புவதற்காக இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்தவகையில் இடைத்தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மற்றும் நக்ரோட்டா தொகுதிகளில் அகா சையத் மொஹ்சின் மற்றும் தேவயானி ராணா ஆகியோர் போட்டியிடுடிகன்றனர்.
ஜார்க்கண்டில் உள்ள காட்ஷிலா தொகுதியில் பாபுலால் சோரன் நிறுத்தப்பட்டுள்ளார். ஒடிசாவில், ஜெய் தோலாகியா நுவாபாடாவிலிருந்து போட்டியிடுவார், லங்காலா தீபக் ரெட்டி தெலங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் போட்டியிடுகிறார் என்று பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஒடிசா, ஜார்க்கண்ட், மிசோரம், பஞ்சாப், தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள எட்டு தொகுதிகளில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்.
இதையும் படிக்க; கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - பேரவையில் முதல்வர் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.