
அகமதாபாத் விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்தில் கத்தார் விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை(அக். 14) அவசரமாக தரையிறக்கப்பட்டது. கத்தாரின் தோஹாவிலிருந்து செவ்வாய்க்கிழமை(அக். 14) காலை ஹாங் காங்குக்குப் புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடிரென நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து அகமதாபாத்தின் சர்தர் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த விமானம் கியூஆர்816 உடனடியாக அகமதாபாத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பகல் 2.12 மணிமுதல் 2.38 வரை அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.