கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்ய முன்னாள் பிரதமர் காலமானார்!

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்ய முன்னாள் பிரதமர் காலமானார்..!
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காபடம் | பேஸ்புக் சமூக ஊடகப் பதிவிலிருந்து
Published on
Updated on
1 min read

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா காலமானார். அவருக்கு வயது 80. கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கூத்தட்டுக்குளம் அருகேயுள்ளதொரு ஆயுர்வேத சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை வளாகத்தில் இன்று(அக். 15) காலை வழக்கம்போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரெய்லா ஒடிங்கா திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் அப்பகுதியிலுள்ளதொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெளிநாட்டவர்கள் மண்டல பதிவு அலுவலகத்தில் (எஃப்ஆர்ஆர்ஓ) தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து, அவரது உடலை தாயகம் அனுப்புவதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாகவும் கேரள போலீஸார் தெரிவித்தனர்.

Summary

Former Prime Minister of Kenya, Raila Odinga, who had arrived at Koothattukulam in Kerala's Ernakulam district for Ayurvedic treatment, died on Wednesday following a cardiac arrest, police and hospital authorities said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com