நமது நிருபர்.
தில்லியில் தீபாவளி பண்டிகையின்போது சில கட்டுப்பாடுகளுடன் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
மத்திய அரசு, தில்லி அரசின் கூட்டு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பசுமைப் பட்டாசுகள் மீதான தடையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
மேலும், "பட்டாசுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டபோது, கரோனா தொற்று ஊரடங்கு காலத்தைத் தவிர, காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை.
பட்டாசுகள் தடை செய்யப்பட்டால் சட்ட விரோதமாக பட்டாசுகளை விற்பதற்கு வழி வகுக்கும் என்று பட்டாசு தொழிலில் ஈடுபடுபவர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் தில்லியில் காற்றின் தரக் குறியீட்டில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், பசுமை பட்டாசு வெடிப்பதன் மூலம் வழக்கமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படக்கூடிய மாசு குறைந்துள்ளது என்று நீரி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆகையால், பசுமைப் பட்டாசுகளின் விற்பனை அக்.18 முதல் அக்.20-ஆம் தேதி வரை அனுமதிக்கப்படும். தீபாவளி நாளிலும் அதற்கு முந்தைய நாளிலும் பசுமைப் பட்டாசுகளை மட்டும் காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.