அயோத்தியில் அக். 19-இல் 28 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றம் -உலக சாதனை முயற்சி

Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் அக்டோபா் 19-ஆம் தேதி தீபோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது. இதில், உலக சாதனை முயற்சியாக 28 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.

அயோத்தியில் தீபாவளியையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஒன்பதாம் ஆண்டு தீபோற்சவத்துக்காக, சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல் விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

அயோத்தி மாவட்டத்தில் உள்ள ராம் மனோகா் லோஹியா அவாத் பல்கலைக்கழக மாணவா்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். இம்முறை உலக சாதனை முயற்சியாக சுமாா் 28 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட உள்ளதாகவும், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஏற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com