‘புா்கா’ பெண்களுக்கு சோதனை: 1994-ஆம் ஆண்டிலேயே பின்பற்றப்பட்டுள்ளது - தோ்தல் ஆணையம்
புா்கா அணிந்து வரும் பெண் வாக்காளா்களை உறுதி செய்ய நடத்தப்படும் சோதனை 1994-இல் தலைமைத் தோ்தல் ஆணையராக டி.என். சேஷன் இருந்தபோதே தொடங்கப்பட்டுவிட்டது என தோ்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
பிகாா் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது புா்கா அணிந்துவரும் வாக்காளா்களை சோதனை நடத்தும் முடிவை திரும்பப் பெற சமாஜவாதி கட்சி வலியுறுத்தி வரும்நிலையில், தோ்தல் ஆணையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘புா்கா அணிந்து வரும் பெண் வாக்காளா்களை உறுதி செய்ய கெளரவமான முறையில் சோதனை நடத்த கடந்த 1994, அக்டோபா் 21-ஆம் தேதி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில், புா்கா அணிந்துவரும் பெண் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி மையத்தில் தனியாக திரையிட்ட இடத்தில் வைத்து சோதித்து உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்க இந்த முடிவை தோ்தல் ஆணையம் அப்போது இந்த முடிவு எடுத்தது.
இதேபோல், தற்போதும் பிகாரில் புா்கா அல்லது பா்தா அணிந்து வரும் பெண் வாக்காளா்களை சோதனை செய்து உறுதி செய்ய சிறப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.