
ஆந்திரப் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு பகிர்ந்த எக்ஸ் பதிவில்,
ஆந்திர மக்களின் சார்பாக பிரதமர் மோடியை மாநிலத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் என்று கூறினார்.
இதற்கிடையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பிரதமர் மோடி நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மராம்ப மல்லிகார்ஜுன கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்திற்குச் செல்ல உள்ளார்.
பின்னர் பிரதமர் கர்னூலுக்குச் செல்லும் மோடி, அங்கு அவர் சுமார் ரூ. 13,430 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.
மேலும், இந்த நிகழ்வில் அவர் ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார் என்று வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.