
சத்தீஸ்கரில், இன்று ஒரே நாளில் சுமார் 210 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
பஸ்தார் மாவட்டத்தின் ஜகதால்பூர் பகுதியில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்பட 210 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம், இன்று (அக். 17) சரணடைந்துள்ளனர்.
மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தலைவர்களான ரூபேஷ் (எ) சதீஷ், பாஸ்கர் (எ) ராஜ்மன் மந்தவி, ரனிதா, ராஜு சலாம், தானு வெட்டி (எ) சாந்து மற்றும் 110 பெண்கள் உள்பட 210 நக்சல்கள் சரணடைந்துள்ளது வரலாற்றில் முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் ஏக - 47 ரக துப்பாக்கிகள் உள்பட 153 ஆயுதங்களை, அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஏற்கெனவே, கடந்த செப். 15 ஆம் தேதி 28 பேர் சரணடைந்தனர். இதன்மூலம், இதுவரை 238 நக்சல்கள் சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்கான உதவிகள் அனைத்தும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் உறுதியளித்துள்ளார்.
கடந்த அக். 2 ஆம் தேதி, பஸ்தார் பகுதியில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் கூட்டாக 1.6 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 49 பேர் உள்பட 103 நக்சல்கள் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.