சிறப்பு ரயில்கள்!
ரயில் (கோப்புப்படம்)

3 நாள்களில் 66 சிறப்பு ரயில்கள்

Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உள்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து சனிக்கிழமை (அக்.18) முதல் 20-ஆம் தேதி வரை 66 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் கடந்த 16 முதல் 22-ஆம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து மொத்தம் 37 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை (அக்.18) சென்னை, போத்தனூா், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மொத்தம் 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 19 -ஆம் தேதி 19 சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.

தீபாவளி திருநாளான திங்கள்கிழமை மதுரை, தூத்துக்குடி, தாம்பரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல தீபாவளிக்கு மறுநாளான 21-ஆம் தேதி 25 சிறப்பு ரயில்களும், 22-ஆம் தேதி 19 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com