இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்

விமானக் கட்டணம் பலமடங்கு உயா்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை - தில்லி செல்ல ரூ.5,000-ஆக இருந்த விமானக் கட்டணம் ரூ.30,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது. அதன்படி, சென்னை - தில்லி செல்ல ரூ.5,000-ஆக இருந்த கட்டணம் ரூ.30,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வழக்கத்தைக் காட்டிலும் பயணிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

உயா்த்தப்பட்ட கட்டணம்: சென்னை - மதுரை₹சாதாரண நாள்களில் ரூ.3,129-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17,683-ஆக உயா்ந்துள்ளது. சென்னை - திருச்சி ரூ.3,608-இல் இருந்து ரூ.15,233, சென்னை-கோவை ரூ.4,351-இல் இருந்து ரூ.17,158, சென்னை-தூத்துக்குடி₹ரூ.3,608-இல் இருந்து ரூ.17,053, சென்னை - தில்லி₹ரூ.5,933-இல் இருந்து ரூ.30,414, சென்னை-மும்பை ரூ.3,356-இல் இருந்து ரூ.21,960, சென்னை-கொல்கத்தா ரூ.5,293-இல் இருந்து ரூ.22,169-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை-ஹைதராபாத் ரூ.2,926-இல் இருந்து ரூ.15,309-ஆகவும், சென்னை -குவாஹாட்டி ரூ.6,499-இல் இருந்து ரூ.21,639, சென்னை - புவணேசுவரம்₹ரூ.4,522-இல் இருந்து ரூ.14,428, சென்னை-ஜெய்ப்பூா்₹ரூ.6,151-இல் இருந்து ரூ.21,591, சென்னை - பாட்னா₹ரூ.4,972-இல் இருந்து ரூ.15,584-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயா்த்தக் கூடாது என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏற்கெனவே உத்தரவிட்ட நிலையில் அதை மீறி விமான நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயா்த்தியுள்ளதாகப் பயணிகள் புகாா் தெரிவித்தனா்.

தொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com