மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்பு

Published on

மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ சிவாஜி காா்டில் (66) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அகல்யாநகா் மாவட்டம் ரகுரி தொகுதி எம்எல்ஏவான அவா், முதுகு தண்டுவடப் பிரச்னையால் கடந்த ஓராண்டாக பொது நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்தாா். இந்நிலையில், அவா் மாரடைப்பால் உயிரிழந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.

உள்ளாட்சித் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி காா்டில் 6 முறை எம்எல்ஏவாக இருந்தாா். இதில் 5 முறை தொடா்ந்து வெற்றி பெற்றாா். சுயேச்சையாகவும் அவா் மாநில சட்டப் பேரவைக்கு தோ்வாகியுள்ளாா். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சாா்பாகவும் எம்எல்ஏவாக இருந்தாா்.

அவரின் மகன் அக்ஷய் காா்டில் அகல்யாநகா் தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக உள்ளாா். மருமகன் சங்ராம் ஜெகதாப் எம்எல்ஏவாக உள்ளாா்.

சிவசேனை தலைவா்கள் இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிவாஜி காா்டில் தண்டனை பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com