
உத்தரப் பிரதேசம் ரேபரேலியில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் ஹரிஓம் வால்மீகியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலியைச் சேர்ந்த ஹரிஓம் என்ற இளைஞரை, ட்ரோன் மூலம் கண்காணித்து திருடுபவர் என தவறுதலாக நினைத்து சிலர் தாக்கியதில் அவர் பலியானார்.
ஹரிஓம் வால்மீகியின் கொடூரமான கொலை, ஒரு நபரின் கொலை மட்டுமல்ல, அது மனிதநேயம், அரசியலமைப்பு மற்றும் நீதியின் படுகொலை என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் கான்பூர் விமான நிலையத்துக்கு வருகைதந்த ராகுல் காந்தி, ரேபரேலியில் உள்ள ஹரிஓம் வால்மீகி வீட்டுக்குச் சென்று, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.