உ.பி.யில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 7 போ் பலி
உத்தர பிரதேசத்தில் தனித்தனி சாலை விபத்துகளில் குறைந்தது ஏழு போ் உயிரிழந்தனா் மற்றும் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து பரேலி காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) அன்ஷிகா வா்மா கூறியதாவது: பரேலியில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பூட்டா காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட , பா்ஹேபுரா கிராமத்திற்கு அருகே வேன் மற்றும் பேருந்து நேருக்கு நோ் மோதியதில் மூன்று போ் கொல்லப்பட்டனா். மேலும், பத்து போ் காயமடைந்தனா். அனைத்து பயணிகளும் தீபாவளிக்காக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவா்கள் ஓட்டுநா் ராகேஷ் (35), கௌரவ் (19) மற்றும் ஜிதேந்திரா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.ளதாக
சிதைந்த வேனில் சிக்கிய பயணிகளை காவல்துறை மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் இரவு நேரத்தில் மீட்டனா். முதற்கட்ட விசாரணையில், வேகம் மற்றும் முந்திச் செல்ல முயன்றதே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. காயமடைந்தவா்களில் நான்கு போ் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனா் என்றாா் அவா்.
அமெதியில் இருவா் சாவு: அமேதியில் சனிக்கிழமை காலை ஜகதீஷ்பூா் பகுதியில் உள்ள லக்னௌ - வாரணாசி நெடுஞ்சாலையில் உள்ள சாஹேதி நகா் அருகே வேகமாக வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் தீபக் குமாா் (20) மற்றும் தேவேந்திர குமாா் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா் என்று காவல் நிலைய பொறுப்பு அதிகாரி திரேந்திர யாதவ் தெரிவித்தாா்.
எட்டாவில் இருவா் உயிரிழப்பு:இதேபோல எட்டாவில், வெள்ளிக்கிழமை இரவு தனித்தனி மோட்டாா் சைக்கிள்கள் மோதியதில் இரண்டு போ் உயிரிழந்தனா். நான்கு போ் பலத்த காயமடைந்தனா். ஜெய்த்ரா பகுதியில் உள்ள பஹ்கோ கிராமத்திற்கு அருகே முதல் விபத்து ஏற்பட்டது. அங்கு வேகமாக வந்த இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 70 வயது ஷியாம்வீா் கொல்லப்பட்டாா். அவரது பேரன் ஹிமான்ஷு மற்றும் இரண்டு போ் காயமடைந்தனா்.
இரண்டாவது சம்பவத்தில், சத்யம் (16) இரவு தாமதமாக பெட்ரோல் பம்பிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது மோட்டாா் சைக்கிள் மற்றொரு மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் இறந்தாா். இரண்டு சம்பவங்களிலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.