

ஜம்மு-காஷ்மீரில் ஹெராயினுடன் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கத்ரா சாலையில் வழக்கமான வாகனச் சோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கத்ராவிலிருந்து திக்ரிக்குச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது.
சோதனையில் காரில் இருந்து 9.63 கிராம் ஹெராயின் அடங்கிய பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக உதம்பூரில் வசிக்கும் காவலர் அர்ஜுன் சர்மா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.