
உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உடல் கருகி பலியானார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் மந்த் பகுதியில் சனிக்கிழமை சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் இளைஞர் உடல் கருகி பலியானார்.
பலியான இளைஞர் அங்கித் (25) என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து வட்ட அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறுகையில், உடல் முழுமையாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. காரும் முற்றிலும் எரிந்தது.
காரின் மீது உயர் அழுத்த மின் கம்பிகள் விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
உடல் கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.