மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

பிகார் அடுத்த முதல்வராக நிதீஷ் இருக்க மாட்டாரா? அமித் ஷா சூசகம்

பிகார் அடுத்த முதல்வராக நிதீஷ் குமார் இருக்க மாட்டார் என்பது போல அமித் ஷாவின் சூசகப் பேச்சு அமைந்துள்ளது.

அமித் ஷா - நிதீஷ் குமாா் - கோப்புப்படம்

Published On :

பாட்னா: பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றாலும் அடுத்த முதல்வராக நிதீஷ் குமார் இருக்க மாட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காரணம், சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமாரை அறிவிக்காமல், தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள்தான், அடுத்த முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று அமித் ஷா பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெற்றாலும்கூட, மீண்டும் நிதீஷ் குமார் முதல்வராவாரா என்பது தெளிவுபடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, பிகார் தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் முதலில், அவர்கள் கட்சியின் சார்பில் பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள், பிறகு, கட்சிப் பிரதிநிதிகள் ஒன்றாக அமர்ந்து, யார் தலைமையில் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மகாராஷ்டிரத்தில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்து முதல்வராக்கி, பிறகு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற போது, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அது போல பிகாரிலும் நடக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது அரசியல் நோக்கர்களுக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.