
பிகார் தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் தீபாவளிக்குப் பின் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு முதல் கட்டமாக நவம்பா் 6-இல் 121 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 122 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நவம்பா் 11-இல் நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரதமரின் பிரசாரத் திட்டத்தை பாஜகவின் பிகார் மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் இன்று(அக். 19) வெளியிட்டார். அதன்படி, சமஸ்திபூரில் அக். 24-இல் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி, அன்றைய நாளில் பெகுசாராயிலும் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, அக். 30-இல் முஸாஃபர்பூர், சாப்ராவிலும், அடுத்தக்கட்டமாக நவம்பரில் 2, 3, 6, 7 ஆகிய தேதிகளிலும் பிகாரின் பிற பகுதிகளிலும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.