
கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்களால் பரபரப்பான சூழல் நிலவியது.
தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் இன்று(அக். 20) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பயனாளிகளாக திரளான பெண்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில், அங்கு வந்திருந்தவர்களுக்கு உணவும் பரிசுப் பொருள்களும் வழங்குவதில் தாமதமானது. இதற்காக, காலையிலிருந்தே அவ்விடத்துக்கு வந்திருந்த பெண்கள் உணவு, தண்ணீர் இன்றி வெகுநேரம் இருந்ததால் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
நிகழ்விடத்தில் 10 பெண்கள் மயங்கிக் கீழே விழுந்த நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு நீர்ச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு இப்போது நலம்பெற்றிருப்பதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.