
பிகார் சட்டப் பேரவைக்கான முதற்கட்ட தேர்தலில், களத்தில் இருந்த 61 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிகாரின் 243 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகின்றது. இதில், முதற்கட்டமாக 121 தொகுதிகளில் வரும் நவம்பர் 6 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் நவம்பர் 11 ஆம் தேதியும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நடத்தப்படும் முதற்கட்ட தேர்தலில் போட்டியிட 1,690 பேரின் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 315 பேரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1,375 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்ட தேர்தலில் இருந்து 61 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளதாக, நேற்று (அக். 20) தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிகார் சட்டப் பேரவைத் தேர்தல்களில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகாகட்பந்தன் கூட்டணி இடையில் கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: குடியரசுத் தலைவர், துணைத் தலைவரைச் சந்தித்த பிரதமர் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.