
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலையொட்டி அந்த யூனியன் பிரதேசத்தின் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து இன்று(அக். 20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
பிகார் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீரிலும் ஒடிஸா, ஜார்க்கண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மிஸோரம் ஆகிய 6 மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவ. 11-இல் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவ. 14-இல் நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில் காலியாகவுள்ள புட்காம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளராக ஷியா தலைவர் அகா சையத் மெஹ்மூத் அங்கு போட்டியிடுகிறார். இதனையடுத்து அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் ஒமர் அப்துல்லா உடனிருந்தார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பின், செய்தியாளர்களுடன் பேசிய ஒமர் அப்துல்லா, “ஒட்டுமொத்த கட்சியும் அகா மெஹ்மூத்தின் பின்னணியில் நிற்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளன்று, பெரும் வெற்றி பெற்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் புத்காம் மக்களை அகா மெஹ்மூத் வெற்றிகரமாகப் பிரதிநிதித்துவப் படுத்துபவராக இருப்பார்.
பெரும்பாலான பிற கட்சி வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். ஒவ்வொருத்தரும் அடுத்தவர் தாக்கல் செய்யட்டும் என்று காத்திருந்தனர். பிற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கட்டும் என்பதற்காகவே காத்திருந்தோம். நாங்கள் அவசரப்படவில்லை. இதுவும் எங்களின் ஒரு யுக்தியே” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.