
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலானது இந்தியாவின் பெருமைகளுள் ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவாவில் இன்று(அக். 20) கடற்படை வீரர்களுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அப்போது அவர் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலைப் பார்வையிட்டார்.
அதன்பின், இது குறித்து அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், ‘ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் பெருமை! உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாபெரும் போர்க்கப்பல் இதுவாகும்.
கொச்சியில் இதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது... அந்த மலரும் நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது, தீபாவளியன்று இங்கு வருகை தரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.