
மகனைக் கொன்றதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ள வழக்கில் பஞ்சாப் முன்னாள் டிஜிபி மீது ஹரியாணா காவல் துறையால் முதல் தகவல் அறிக்கை(எஃப்ஐஆர்) பதியப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் பதவி வகித்த முகமது முஸ்தாஃபாவும் அவரது மனைவி ராஸியா சுல்தானாவும் தங்கள் மகனைக் கொன்றதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகரியான முகமது முஸ்தாஃபா பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் டிஜிபியாக இருந்தவர் என்பது, அவரது மனைவி முன்னாள் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தம்பதியின் மகனான அகில் கதெர் ஒரு வழக்குரைஞராவார். இந்த நிலையில், ஹரியாணாவின் பஞ்சகுலா பகுதியில் உள்ள தமது வீட்டில் உள்ள தனி அறையில் கடந்த வியாழக்கிழமை அவர் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்ததன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ஹரியாணா காவல்துறை அதிகாரிகள், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அக்தெர் உயிரிழக்கும் சில வாரங்களுக்கு முன் பதிவு செய்துள்ள ஒரு காணொலியில், தன்னை தமது அப்பாவும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்தியுள்ளார்.
இதனையடுத்து, அவரது மரணம் திட்டமிட்ட கொலை என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அக்தெரின் மனைவி மற்றும் சகோதரியும் இவ்வழக்கில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கை விசாரிக்க உதவி ஆணையர் நிலையிலுள்ள ஒரு அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பஞ்ச்குலா துணை ஆணையர் ஸ்ரீஷ்டி குப்தா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.