
ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், சனே தகைச்சிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”ஜப்பான் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானும் இந்தியாவும் கட்டமைத்துள்ள சிறப்பு உலகளாவிய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைவதற்கு வலுவான ஜப்பான்-இந்தியா உறவு ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.