
சத்தீஸ்கரில் 2026-ஆம் ஆண்டு மார்ச் முடிவுக்குள் நக்சல்கள் முழுமையாக ஒழிக்கப்படுவர் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் சூளுரைத்துள்ளார்.
காவல் துறையைச் சிறப்பிக்கும் விதமாக அனுசரிக்கப்படும் ‘காவலர் வீர வணக்க நாளில்’ செய்தியாளர்களுடன் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், “காவலர் வீர வணக்க நாளானது காவலர்கள், பாதுகாப்பு படையினரின் தியாகத்தை குறிக்கும் விதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கடினமானச் சூழலிலும் இருந்துகொண்டு அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனர் வீரர்கள்.
நக்சலிசத்துக்கு எதிரான சண்டையில் பாதுகாப்புப்படையினர் வீர தீர துணிச்சலை வெளிக்காட்டியுள்ளனர். அவர்களது பராக்கிரமத்தால் நக்சல்களை பின்னடையச் செய்திருப்பதுடன் அப்பகுதிகளில் வளர்ச்சியையும் உறுதி செய்திருக்கின்றனர்.
சத்தீஸ்கரிலிருந்து நக்சலிசம் 2026, மார்ச் 31-க்குள் களையறுக்கப்படும் என்ற தீர்க்கமான அரசின் இலக்கானது, நமது காவலர்களின் துணிச்சலான நடவடிக்கைகளுடன் அந்த இலக்கு குறிப்பிட்ட கால வரம்புக்குள் நிறைவேற்றப்படும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.