
திருவனந்தபுரம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளம் சென்றடைந்தார். புது தில்லியிலிருந்து விமானத்தில் இன்று(அக். 21) மாலை திருவனந்தபுரம் சென்றிறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அல்லேகர், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சிறுபான்மையினர், மீன் வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறைக்கான மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அக். 24 வரை கேரளத்தில் சுற்றுப்பயணம் செய்யும் குடியரசுத் தலைவர், அக். 22 சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். அதனைத்தொடர்ந்து, திருவனந்தபுரம், வர்க்கலா, பாளை, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.