நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு!

தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து...
தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது
தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதுபடம் - எக்ஸ் / ராஜ்நாத் சிங்
Published on
Updated on
1 min read

தடகள ஈட்டி ஏறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் மற்றும் ஆசியப் போட்டிகளில் தடகள ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பலமுறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இத்துடன், இந்திய ராணுவத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இணைந்த அவருக்கு நயிப் சுபேதார் எனும் பதவி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, படிப்படியாக அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு சுபேதார் மேஜர் என்ற பதவியை அடைந்தார். இந்த நிலையில், தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (அக். 22) வழங்கியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு, ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தடகள விளையாட்டில் வழங்கப்படும் பல உயரிய விருதுகளை வென்று குவித்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எரிபொருள் கசிந்ததால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்!

Summary

Javelin thrower Neeraj Chopra has been awarded the honorary rank of Lieutenant Colonel in the Indian Army.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com