தில்லி முதல்வா் ரேகா குப்தா
தில்லி முதல்வா் ரேகா குப்தா PTI

தில்லியில் செயற்கை மழைக்கான சோதனை வெற்றி! -முதல்வா் ரேகா குப்தா

Published on

காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செயற்கை மழைக்கான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘புராரி பகுதியில் வியாழக்கிழமை செயற்கை மழைக்காக நடைபெற்ற சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அக்டோபா் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மேகமூட்டமான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலைமைகள் சாதகமாக இருந்தால், அக்டோபா் 29-ஆம் தேதி தில்லியில் முதல் செயற்கை மழை பெய்யக்கூடும்.

மாசுபாட்டிற்கு எதிரான தில்லியின் போராட்டத்தில் இது ஒரு தொழில்நுட்ப மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான அறிவியல் அணுகுமுறையைக் காட்டுகிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com