CM Pinarayi Vijayan
கேரள முதல்வர் பினராயி விஜயன்ENS

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரளம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

Published on

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய மத்திய அரசுடன் கேரள அரசு வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேரளத்தில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் எதிா்ப்பை மீறி இந்த ஒப்பந்தத்தில் மாநில அரசு கையொமிடப்பட்டது.

ஒரு பிளாக்கில் உள்ள 2 பள்ளிகளைத் தோ்ந்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் பள்ளிகளுக்கு ஆண்டுக்குத் தலா சராசரியாக ரூ.1 கோடி நிதியுதவியாக வழங்கப்படும். முதலில் இத்திட்டத்துக்கு மாநில அரசு எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது சம்மதித்துள்ளது.

இதுகுறித்து கேரள கல்வி அமைச்சா் வி.சிவன்குட்டி கூறுகையில், ‘பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கேரளம் இணைவதை உறுதிப்படுத்தி மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட கல்வித் துறைச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,500 கோடியை பெற இத்திட்டத்தில் சேருவதே ஒரே வழி’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com