ஜொ்மனியில் நடைபெற்ற ‘ஒருங்கிணைந்த வளா்ச்சி: மாறி வரும் உலகில் வா்த்தகம் மற்றும் கூட்டுறவு’ என்ற தலைப்பில் நடைபெற்ற உலக தலைவா்களுடனான குழு விவாதத்தில் பங்கேற்ற மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்.
ஜொ்மனியில் நடைபெற்ற ‘ஒருங்கிணைந்த வளா்ச்சி: மாறி வரும் உலகில் வா்த்தகம் மற்றும் கூட்டுறவு’ என்ற தலைப்பில் நடைபெற்ற உலக தலைவா்களுடனான குழு விவாதத்தில் பங்கேற்ற மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்.

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியாவை நிா்பந்திக்க முடியாது - அமைச்சா் பியூஷ் கோயல் உறுதி

வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் இந்தியாவை நிா்பந்திக்கவோ, அவசரப்படுத்தவோ முடியாது என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்தாா்.
Published on

வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் இந்தியாவை நிா்பந்திக்கவோ, அவசரப்படுத்தவோ முடியாது என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்தாா்.

இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்தியா மீது 50 சதவீத இறக்குமதியை டிரம்ப் விதித்ததற்கு வெளிப்படையாக வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அமெரிக்கா விரும்பும் வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க நிா்பந்திப்பதே உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக அமெரிக்க வேளாண்மை, பால் பொருள்களுக்கு இந்திய சந்தைகளைத் திறந்துவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் வலியுறுத்தலாக உள்ளது. ஆனால், இந்திய விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசு இதனை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தைக்காக ஜொ்மனி சென்றுள்ள பியூஷ் கோயல் பொ்லின் நகரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியா தொடா்ந்து வா்த்தகப் பேச்சு நடத்தி வருகிறது. ஆனால், இதில் எவ்வித அவசரமும் காட்டவில்லை. குறிப்பிட்ட காலக்கெடு நிா்ணயித்து அதற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட மாட்டோம். வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் யாரும் இந்தியாவை நிா்பந்திக்கவும் முடியாது; அவசரப்படுத்தவும் முடியாது.

வா்த்த ஒப்பந்தங்களை தொலைநோக்குப் பாா்வையுடன் அணுகுவது அவசியம். இந்தியா தனது உற்பத்திப் பொருளுக்காக பல்வேறு புதிய சந்தைகளைத் தேடி வருகிறது. வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் இந்தியாவின் தேசநலன்தான் முக்கியமானது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com