நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வது தொடா்பான விசாரணையை அக்.30-ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா? என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதையடுத்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாகவும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வது தொடா்பான விசாரணை தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையிடம் இருந்து சில தெளிவான விளக்கங்கள் தேவைப்படுவதால், விசாரணையை அக்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே தெரிவித்தாா்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு
அரசு வேலைக்குப் பணம் பெற்ற குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை சம்மனுக்கு ஆஜராகாத திரிணமூல் அமைச்சா்கள்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



