

பஞ்சாபில் குழந்தையை விற்று போதைப்பொருள் வாங்கிய தம்பதியை கைது செய்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதி சந்தீப் சிங் மற்றும் குர்மான் கௌர். இவர்களுக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான இத்தம்பதியினர் தங்களது குழந்தையைப் பராமரிக்க முடியாத நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் குழந்தையை புத்லாடா நகரில் உள்ள வியாபாரியின் குடும்பத்திற்கு ரூ.1.80 லட்சத்திற்கு விற்றுள்ளனர்.
குழந்தையின் தாய்வழி அத்தை போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்த போலீஸார், குழந்தையையும் மீட்டனர்.
குழந்தையை விற்று அதன்மூலம் பெற்ற பணத்தை தம்பதியினர், போதைப் பொருள் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கு செலவிட்டதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
மாநில முன்னாள் மல்யுத்த வீராங்கனையான குழந்தையின் தாயார் குர்மான் கௌர் திருமணத்திற்குப் பிறகு போதைப் பொருளுக்கு அடிமையானதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.