

தெலங்கானா எம்எல்ஏ புட்டா சுதாகர் யாதவ் சைபர் மோசடியில் ரூ. 1.07 கோடி பணத்தை இழந்துள்ளார்.
சைபர் குற்றங்களுக்கு முக்கிய பிரமுகர்களும் விதிவிலக்கல்ல. அரசியல் பிரபலன்களைக் குறிவைத்து கூட சைபர் மோசடிகள் நடக்கின்றன.
தெலங்கானா மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் உள்ள மைடுகூர் தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ புட்டா சுதாகர் யாதவ்(61). இவரிடம் மும்பை சைபர் கிரைம் அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.07 கோடி பணத்தைப் பறித்துள்ளனர்.
தாங்கள் மும்பை சைபர் கிரைம் அதிகாரிகள் என்றும் பண மோசடி, கடத்தலுக்காக எம்எல்ஏவை கைது செய்வதாக மிரட்டிய மோசடி கும்பல், இதிலிருந்து விடுபட ஜாமீன் பெற வேண்டுமானால் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதை நம்பிய எம்எல்ஏ, அவர்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசாரை அணுகினார். கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுபோன்ற மோசடிகளை தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 அல்லது cybercrime.gov.in மூலம் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.