கர்னூல் பேருந்து விபத்து: போதையில் பைக் ஓட்டியவரே காரணம் - தடயவியல் அறிக்கை

குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரே கர்னூல் பேருந்து விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது குறித்து...
தீப்பிடித்து எரிந்த பேருந்து...
தீப்பிடித்து எரிந்த பேருந்து...Express
Published on
Updated on
1 min read

கர்னூல் சொகுசுப் பேருந்து விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்த விவகாரத்தில், குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரே காரணம் என தடயவியல் அறிக்கையில் தகவல் தெரியவந்துள்ளது.

பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஷிவசங்கர் என்பவர் ஓட்டி வந்து, பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை நடந்த இந்த விபத்தில், இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததும் பேருந்து முழுவதும் தீ பரவியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரின் உடல் உறுப்புகளை பரிசோதனை செய்ததில், விபத்தின்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு எரியாததும் விபத்துக்கு மற்றொரு காரணம் என காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம், கா்னூல் அருகே ஹைதராபாதில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, இருசக்கர வாகனம் மீது கடந்த வெள்ளிக்கிழமை (அக். 24) அதிகாலை 3 மணியளவில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 20 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த பெட்ரோல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் காவல் துறைக்கு கிடைத்தது. அதில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் விபத்து நடந்த நேரத்திற்கு சற்று நேரம் முன்பு இருசக்கர வாகனத்தை பெட்ரோல் நிலையத்திலிருந்து ஓட்டிச் செல்கிறார்.

விபத்து நடந்த இடத்திலும் பேருந்துக்கு கீழே இருசக்கர வாகனம் மாட்டி தீப் பிடித்து எரிந்திருந்தது. இதற்கிடையே உள்ள தொடர்பு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற நபரே விபத்துக்குக் காரணம் என தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ஷிவசங்கர் என்பவரின் உடல் உறுப்புகளை பரிசோதனை செய்ததில் அவர் குடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்துப்பேசிய டிஐஜி கே.பிரவீன், ''குடிபோதையில் இருந்த நபர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று பேருந்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். வாகனத்தின் முகப்பு விளக்கும் எரியாததால், பனிமூட்டத்தில் பேருந்தில் இருந்தவர்களுக்கு இருசக்கர வாகனம் சரியாகத் தெரியவில்லை'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | ரத்த மாற்றம் செய்ததில் மருத்துவர் கவனக்குறைவு: 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு!

Summary

Drunk biker caused Kurnool bus accident, says forensic report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com