

இந்தியாவில் நிலங்களை விற்ற பணத்தைக் கொடுத்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 ஹரியாணா இளைஞர்கள், கைவிலங்குடன் நாடுகடத்தப்படுள்ளனர்.
கழுதைப் பாதை என்று அழைக்கப்படும் வழியில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய, இந்தியாவிலிருந்து தரகர்கள் மூலம் அமெரிக்கா சென்ற 25 வயது முதல் 30 வயதுடைய 50 இளைஞர்கள், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகிறார்கள்.
அவ்வாறு நாடு கடத்தப்பட்ட ஒரு இந்திய இளைஞர் கூறுகையில், நான் என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் விவசாயம் பார்த்து வந்த நிலங்களை விற்று தரகர்களிடம் ரூ.57 லட்சம் வரை கொடுத்திருக்கிறேன். அவர்கள் எங்களை காட்டு வழியாக அமெரிக்காவுக்குள் அழைத்துச் சென்றனர். அப்போதுதான் நாங்கள் அங்கு கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது நாடு கடத்தப்பட்டோம் என்கிறார்.
அதாவது, ஒவ்வொரு எல்லையைக் கடக்கும்போதும், குறிப்பிட்டத் தொகையை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். முதலில் 42 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கௌதமாலாவைக் கடக்கும் போது ரூ.6 லட்சம், மெக்சிகோவைக் கடக்கும் போது ரூ.6 லட்சம், இப்படியே அனைவரும் பல லட்சங்களைக் கொடுத்திருக்கிறோம். அவர்கள் எங்களை பாதுகாப்பாக அமெரிக்காவுக்குள் அனுப்புவதற்கு பதிலாக நாங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறோம். இன்று கைவிலங்குடன் நாடு வந்து சேர்ந்திருக்கிறோம் என்கிறார்கள் கண்ணீருடன்.
மேலும், கழுதைப் பாதை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டாம் என்றும், இதுபோன்ற தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தில்லி விமான நிலையம் வந்து சேர்ந்த இளைஞர்களை அவர்களது குடும்பத்தினர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றும், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க... மதுரை சாலையில் கிடந்த ரூ. 17 லட்சம்! ஹவாலா பணமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.