ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா!

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா அதிகப்படுத்தியுள்ளது.

News image
பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப்.
Updated On :27 அக்டோபர் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா அதிகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு அக்.27-ஆம் தேதியன்று 5.4 லட்சம் பீப்பாய்களை எட்டியது. இது 2022-க்குப் பிறகு அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த அதிகளவு கச்சா எண்ணெய் ஆகும் என கெப்ளா் ஆய்வு நிறுவனத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

இதனால் அக்டோபா் மாத்தில் அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு ஒரு நாளைக்கு 5.75 லட்சம் பீப்பாய்களாகவும் நவம்பரில் ஒரு நாளைக்கு 4 லட்சம் முதல் 4.5 லட்சமாகவும் இருக்கும் என நிபுணா்கள் தெரிவித்தனா்.

ரஷியாவில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டாா்.

ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்கா கடந்த 22-ஆம் தேதி பொருளாதாரத் தடை விதித்தது. இதன் தொடா்ச்சியாக ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா விரைவில் நிறுத்திக்கொள்ளும் என டிரம்ப் பலமுறை கூறி வருகிறாா்.

இந்தச் சூழலில் அமெரிக்காவுடனான வா்த்தக உறவை சீரமைக்கும் நோக்கில் அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது.

இருப்பினும், இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகளின் பட்டியலில் ரஷியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன.