

கான்பூரில் மருந்து விலை தொடர்பான தகராறில் சட்ட மாணவரை மருந்தக உரிமையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கேசவ்புரத்தைச் சேர்ந்த முதலாமாண்டு எல்எல்பி மாணவர் அபிஜீத் சிங் சன்டேல்(22). இவருக்கும், மருந்தக உரிமையாளருக்கும் மருந்து விலை தொடர்பான விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மருந்தக உரிமையாளர் அவரது சகோதரருடன் இணைந்து சட்ட மாணவரின் வயிறு மற்றும் இரண்டு விரல்களை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவரை மீட்ட உள்ளூர்வாசிகள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்து தலையில் 14 தையல்கள் போட்டனர்.
கல்யாண்பூர் உதவி காவல் ஆணையர் ரஞ்சீத் குமார் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட மருந்தக உரிமையாளர் அமர் சிங் சௌகான், அவரது சகோதரர் விஜய் சிங் மற்றும் உதவியாளர் நிகில் திவாரி ஆகியோர் சன்டேலை கத்தியால் தாக்கினர்.
நான்காவது குற்றவாளியான பிரின்ஸ் ஸ்ரீவஸ்தவா தலைமறைவானார் என்றார். இந்த சம்பவத்தில் தனது மகன் அபிஜீத் சிங் சன்டேல் மீது மிரட்டி பணம் பறித்ததாக பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தாயார் நீலம் சிங் சன்டேல் குற்றஞ்சாட்டினார்.
தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர் மீது போலீஸார் புதிதாக கொலை முயற்சி வழக்கினைப் பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.