

வங்கக் கடலில் உருவாகி, ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து வரும் தீவிரப் புயலான மோந்தா, தற்போது ஆந்திரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் கடலில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடற்கரையை மோந்தா புயல் நெருங்கிவரும் நிலையில், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநில கடலோர மாவட்டங்கள் உச்சபட்ச கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மோந்தா தீவிரப் புயலானது செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி ஆந்திர மாநிலத்தின் மசிலிப்பட்டினத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், இன்று காலை 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயலானது ஒரு சில மணி நேரங்களாக மீண்டும் பழைய வேகத்தில் அதாவது 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர கடற்கரையை தீவிர புயல் நெருங்கும் நிலையில், ராஜமுந்திரி விமான நிலையத்தில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, நேற்று புயலான வலுப்பெற்று இன்று காலை தீவிரப் புயலாக மாறி, ஆந்திரத்தில் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கவிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.