

வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள மோந்தா புயல், ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் இன்றிரவில் கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இப்புயலின் தாக்கத்தால் ஆந்திர கடலோரப் பகுதிகளில், ராயலசீமா, தெலங்கானாவின் கடலோரப் பகுதிகளில், சத்தீஸ்கரின் தெற்கு மாவட்டங்களில், ஒடிஸாவில் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக(சிவப்பு எச்சரிக்கை) தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் இன்றிரவில் சூறைக்காற்று மணிக்கு அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாமெனவும், மரங்கள், மின் கம்பங்கள், கோபுரங்கள் அருகே செல்வதைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.