

வங்கக் கடலில் உருவாகி ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தீவிர மோந்தா புயலானது காக்கிநாடா அருகே கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், வீட்டை விட்ட வெளியே வர வேண்டாம் என ஆந்திர அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், கடற்கரை மாவட்டங்களில், மக்களுக்கு புயல் குறித்து உடனுடக்குடன் அறிவிக்கும் குரல் வழி எச்சரிக்கையையும் ஆந்திர மாநில அரசு முதல் முறையாகப் பயன்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பானது செவ்வாய்க்கிழமை, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதல்படி, புயல் முன்னெச்சரிக்கை குறித்து மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் வெளியிட்டு வருகிறது.
செல்போன் குறுந்தகவல்கள் மூலமும், பல்வேறு இடங்களில் குரல் வழி எச்சரிக்கையாகவும் இது அளிக்கப்பட்டு வருகிறது.
கடற்கரையோர கிராமங்களில் ஒவ்வொரு நிமிடமும் புயல் நிலவரம் குறித்து ஒலிப்பெருக்கி வாயிலாக தகவல் வெளியிடப்படுகிறது. இது சோதனை முறையில் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மின் தடை ஏற்பட்டாலும் கூட, 360 கோணத்தில் ஒலிப்பெருக்கி வைக்கப்பட்டு, மக்கள் தெளிவாக புயல் நிலவரத்தை அறியும் வகையிலும் இந்த வசதி மேலும் சில கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு அறிவுறத்தியிருக்கிறது.
ஆந்திரத்தில் புயல் கரையைக் கடக்கவிருப்பதால், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தி வருகிறது.
வங்கக் கடலில் உருவான மோந்தா தீவிர புயலானது, வடக்கு - வடமேற்காக ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது, மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என்றும், புயல் கரையைக் கடக்கும்போது 90 - 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும், அவ்வப்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.