தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பேருந்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று தில்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தில்லி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையம் அருகே பேருந்து தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தவுடன், விரைந்து செயல்பட்ட விமான மீட்பு மற்றும் தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தால் தில்லி விமான நிலைய செயல்பாடுகளில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை, அனைத்து விமானங்களும் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தில்லி விமான நிலைய காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.