

ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்டுகள் பொருத்தியதாகக் கருதப்படும் வெடிகுண்டு தாக்குதலில் 10 வயது சிறுமி பலியாகியுள்ளார்.
மேற்கு சிங்பம் மாவட்டத்தின், திலாபோசி வனப் பகுதியில் இன்று (அக். 28) சிரியா ஹெரென்ஸ் (வயது 10) எனும் பழங்குடியின சிறுமி ஒருவர் மருத்துவ இலைகள் பறிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு பொருத்தப்பட்டிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை அவர் மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த வெடிகுண்டு வெடித்ததில் சிரியா ஹெரென்ஸின் இரண்டு கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சம்பவயிடத்திலேயே அவர் பலியாகியுள்ளார். இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காவல் துறையினரைக் குறிவைத்து அப்பகுதியில் இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டை பொருத்தியிருக்கக் கூடும் எனவும், பலியான சிறுமியின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஐக்கிய அரபு அமீரக லாட்டரி: ரூ.240 கோடி ஜாக்பாட் வென்ற இந்திய இளைஞர்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.