பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னை சென்ட்ரல் செல்லும் 3 ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பாடு!

சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாக இயக்கம்!

News image

ரயில்கள் தாமதமாகப் புறப்பாடு!

ANI

Updated On :28 அக்டோபர் 2025, 11:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்(22825) ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 12.10 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

ஹௌரா - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்(12841) ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 3.10 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும்.

சந்திரகாசி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(22807) சந்திரகாசி ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) மாலை 5.55 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 5.55 மணிக்குப் புறப்படும்.

தான்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ்(13351) தான்பாத் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 11.35 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 6.35 மணிக்குப் புறப்படும்.

எஸ்எம்விடி பெங்களூரு - டானாபூர் எக்ஸ்பிரஸ்(03252) எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) இரவு 11.50 மணிக்குப் பதிலாக 6 மணி 40 நிமிஷங்கள் தாமதமாக நாளை(அக். 29) காலை 6.30 மணிக்குப் புறப்படும்.

Summary

Owing to the cyclone impact, East Coast Railway has made changes and rescheduling in the pattern of train services.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.