பாகிஸ்தான் பெண்ணுக்கு 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியக் குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் குடியேறிய 38 வயது பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.
Published on

பாகிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் குடியேறிய 38 வயது பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.

பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில் வசித்து வந்த பூனம் என்ற அந்த பெண், அந்த பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் அதிகரித்ததால் இந்தியாவில் நீண்டகால விசா பெற்று, உத்தர பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள உறவினா்கள் வீட்டில் குடியேறினாா். கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியரான புனீத் குமாா் என்பவரைத் திருமணம் செய்து கொண்டாா்.

2013-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் சென்று அங்குள்ள உறவினா்களையும் சந்தித்து வந்தாா். பூனம் இந்தியாவில் திருமணம் செய்து நிரந்தரமாக தங்கி வந்ததால் பாகிஸ்தானில் அவருக்கான அடையாள ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பாகிஸ்தான் பாஸ்போா்ட்டை புதுப்பிக்க முடியாமல் போனது.

இதைத் தொடா்ந்து பூனம் இந்திய குடியுரிமை பெற தொடா்ந்து விண்ணப்பித்து வந்தாா். பலமுறை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பூனம் அண்மையில் இந்தியக் குடியுரிமையைப் பெற்றாா். இது தங்களுக்கு தீபாவளிப் பரிசாக அமைந்ததாக அவரின் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இன்னல்களால் பாதிக்கப்பட்டு 2014 டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தோருக்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com