

ராஜஸ்தானில் நடைபெறும் கால்நடைக் கண்காட்சியில் கோடிக்கணக்கான மதிப்புடைய கால்நடைகள் ஏலம் விடப்பட்டன.
ராஜஸ்தானில் ஆண்டுதோறும் கால்நடைகளுக்கான புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இந்தாண்டில் அக். 23-ல் தொடங்கிய இந்தக் கண்காட்சி, நவ. 7 வரையில் நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் பல்வேறு கால்நடைகள் ஏலமும் விடப்படும். விலையுயர்ந்த கால்நடைகளின் கண்காட்சியின்போது, சண்டிகரைச் சேர்ந்த ஷாபாஸ் என்ற குதிரையும் ஏலம் விடப்பட்டது. இரண்டரை வயதே ஆன ஷாபாஸ் குதிரையின் மதிப்பு ரூ. 15 கோடி என்றும், அதன் இனப்பெருக்கத்துக்கான செலவு மட்டும் ரூ. 2 லட்சம் என்றும் அதன் உரிமையாளர் கேரி கில் கூறினார்.
தொடர்ந்து, உஜ்ஜைனைச் சேர்ந்த ராணா என்ற எருமையும் ஏலத்துக்கு வந்தது. சுமார் 600 கிலோ எடையுள்ள ராணா, 8 அடி நீளம் மற்றும் 5.5 அடி உயரம் கொண்டது. ராணாவின் ஒருநாள் உணவுக்காக மட்டும் சுமார் ரூ. 1,500 செலவிடப்படுகிறதாம். அதன் உணவில் பருப்பு, மாவு, முட்டை, நெய், பால், மருந்துகளும் அடங்கும்.
ராஜஸ்தானைச் சேர்ந்த அன்மோல் என்ற எருமையின் மதிப்பு ரூ. 23 கோடி. அன்மோலை அரச குடும்பத்தைச் சேர்ந்தவரைப்போல பார்த்துக் கொள்வதாக அதன் உரிமையாளர் கூறுகிறார்.
மற்றொரு குதிரையாக ரூ. 11 கோடி மதிப்புடைய பாதலும் கண்காட்சியில் இடம்பெற்றது. இந்தக் குதிரை, 285 குட்டிகளுக்கு தந்தையாகவும் இருக்கிறது.
இதையும் படிக்க: சகோதரிகளின் மார்ஃபிங் புகைப்படங்களை அனுப்பி மிரட்டல்: தம்பி தற்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.