

ராஜஸ்தானில் ‘மோந்தா’ புயலால் மிகக் கனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இன்று (அக். 28) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பண்டி மாவட்டத்தின் நைன்வா பகுதியில் 130 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தின் பிற பகுதிகளான உதய்பூர், கோட்டா மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை(அக். 29) முதல் மழையின் தீவிரம் குறையத்தொடங்கினாலும், அடுத்த 4 - 5 நாள்களுக்கு ராஜஸ்தானின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ராஜஸ்தானின் மேற்கு பகுதிகளான பைகானெர் மற்றும் ஷேகவதி மண்டலங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.