காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கிய ‘மோந்தா' புயல்!

ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே பலத்த சூறைக்காற்றுடன் புயல் கடக்கத் தொடங்கியது...
காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கிய ‘மோந்தா' புயல்!
படம் | @Indiametdept
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல், ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் பலத்த சூறைக்காற்றுடன் கரையைக் கடக்கத் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆவுவ்ய் மையம் தெரிவித்துள்ளது.

இன்று(அக். 28) மாலை 4.30 மணி நிலவரப்படி, 6 மணி நேரமாக வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி(நிலப்பரப்பை நோக்கி) மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த இந்தப் புயல் மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளது. அடுத்த 3 - 4 மணி நேரத்துக்குள் புயல் கரையைக் கடந்துவிடும் என்றும் எதிர்பார்ப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இப்புயலின் தாக்கத்தால் ஆந்திர கடலோரப் பகுதிகளில், ராயலசீமா, தெலங்கானாவின் கடலோரப் பகுதிகளில், சத்தீஸ்கரின் தெற்கு மாவட்டங்களில், ஒடிஸாவில் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக(சிவப்பு எச்சரிக்கை) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் சூறைக்காற்று மணிக்கு அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Summary

Latest observations indicates that the LandfallProcess has commenced. The landfall process will continue for next 3-4 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com