

இந்த ஆண்டு நடைபெற்ற கொலைகளில் தில்லியை உலுக்கிய கொலைச் சம்பவமாக மாறியிருக்கிறது 21 வயது தடய அறிவியல் துறை மாணவி, தன்னுடைய 32 வயது காதலரைக் கொலை செய்திருப்பது.
யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்த 32 வயது ஆண் நண்பர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
திருமணம் செய்யாமல் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த கொலை நடந்துள்ளது. கொலைக்குப் பின்னணியாக, இருந்தது, நம்பிக்கைத் துரோகம் என்றும், மிகவும் திட்டமிட்டு இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.
அதாவது, தடய அறிவியல் துறையில், பெண்ணுக்கு இருந்த ஆர்வமே, சொந்த ஊரான மொராதாபாத்திலிருந்து தில்லி வந்து அத்துறையில் படித்து வந்துள்ளார். இதுவே, இன்று ஒரு கொலையை செய்து, தடயங்களை அழிக்கவும் அவருக்கு உதவியிருக்கிறது.
இவர் தன்னுடைய மேலும் இரண்டு ஆண் நண்பருடன் அக். 5ஆம் தேதி, கொலை செய்யப்பட்ட நபரின் குடியிருப்புக்கு இரவில் சென்றிருக்கிறார். அவரை அடித்து மொபைல் சார்ஜர் ஒயர் கொண்டு கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கிறார்.
பிறகு, வீட்டிலிருந்து சிலிண்டரை திறந்து பற்ற வைத்து விபத்து போல மாற்றியிருக்கிறார். இந்த சம்பவத்தில், கொலை செய்யப்பட்டவரின் உடல் முற்றிலும் எரிந்து நாசமாகியிருக்கிறது.
மறுநாள் காலை, இந்த குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இது கவனக்குறைவால் நடந்த விபத்து என விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், தீ விபத்து நடந்த விதம் மற்றும் இவரது உறவினர் கொடுத்த புகார் காரணமாக விசாரணை வேறு விதத்தில் மாறியது.
அப்போதுதான், அங்கிருந்த சிசிடிவி கேமராவில், விபத்து நேரிடுவதற்கு முன்பு, மூன்று பேர் குடியிருப்புக்குள் நுழைவது பதிவாகியிருந்தது. பிறது, அப்பெண் மட்டும் விரைவாக வெளியேறியிருக்கிறார். இதையடுத்து, அங்கு பதிவான செல்போன் பதிவுகளைக் கொண்டு அக். 18 அப்பெண்ணும் அவரிடம் விசாரணை நடத்தியதில் மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தீ விபத்து நடந்த இடத்திலிருந்த கணினியில் சேமிக்கப்பட்டிருந்த கோப்புகளில் தவறான விடியோக்களும், அதில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடைய பாலியல் விடியோக்களும் இடம்பெற்றிருந்ததே விசாரணையை மாற்றியதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், ஆண் நண்பர் வைத்திருந்த விடியோக்களை அப்பெண் பார்த்து, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதால் பழிவாங்கவும், தனக்குத் தெரியாமல் விடியோ எடுத்து, அதனை டெலீட் செய்ய மறுத்ததால் ஆத்திரத்திலும் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆத்திரம் மற்றும் அவநம்பிக்கையுடன், தனக்கிருக்கும் தடயஅறிவியல் அறிவைப் பயன்படுத்தி அவர் கொலை செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.