நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மண்’ விருது!

நடிகர் ஆமிர் கானுக்கு கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்‌ஷ்மண் விருது வழங்கப்படவுள்ளதைப் பற்றி...
ஆமிர்கான்.
ஆமிர்கான்.
Published on
Updated on
1 min read

பிரபல ஹிந்தி நடிகர் ஆமிர்கானுக்கு கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மண் விருதை வழங்க, ஆர்.கே.லக்‌ஷ்மணின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

ஆர்.கே.லக்‌ஷமண் விட்டுச் சென்ற புகழைக் கொண்டாடும் வகையில், சிறந்து விளங்குபவர்களுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்‌ஷ்மனின் பெயரில் விருது வழங்க அவரது குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, முதல் விருதை பிரபல ஹிந்தி நடிகரும் தயாரிப்பாளருமான ஆமிர்கானுக்கு வழங்க அவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

நவம்பர் 23 ஆம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நடத்தி அந்த விருதை வழங்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். புணேவில் உள்ள எம்.சி.ஏ. கிரிக்கெட் திடலில் மாலை 5 மணிக்கு இசை நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகழ்பெற்ற இந்திய கார்ட்டூனிஸ்ட் மற்றும் ஓவியரான ஆர்.கே.லக்‌ஷ்மண், தனது படைப்பான “தி காமன் மேன்” மற்றும் அவரது தினசரி கார்ட்டூன் “யூ சேட் இட்” ஆகியவற்றிற்காக மிகவும் பிரபலமானவர்.

தனது மூத்த சகோதரரான ஆர்.கே.நாராயண் ஆங்கில இலக்கியத்தில் பல்வேறு நாவல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதி ஷங்கர் நாக் இயக்கிய “மால்குடி டேஸ்” நிகழ்ச்சியின் தொலைக்காட்சி தழுவலுக்கான ஓவியங்களை உருவாக்கிய பெருமையும் லக்ஷ்மணுக்கு உண்டு.

ஆர்.கே.லக்‌ஷ்மன் 2015 ஆம் ஆண்டு புணேவில் தனது 93 வயதில் காலமானார். அவரது பணிக்காலத்தில், அவருக்கு 1973 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் 2005 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் மத்திய அரசு வழங்கிய கௌரவப்படுத்தியது. ஆர்.கே. லக்‌ஷ்மன் 2004 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Aamir Khan to be awarded the first-ever R. K. Laxman Award for Excellence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com