சென்னை ஐஐடி
சென்னை ஐஐடிகோப்புப் படம்

பள்ளிகளில் ‘ஏஐ’ கல்வி: சென்னை ஐஐடி பேராசிரியா் தலைமையில் சிபிஎஸ்இ குழு அமைப்பு

நிபுணா் குழுவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அமைத்துள்ளது.
Published on

பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கீட்டு சிந்தனை (ஏஐ, கம்ப்யூடேஷனல் திங்கிங்) குறித்த பாடத்திட்டத்தை உருவாக்க சென்னை ஐஐடி பேராசிரியா் தலைமையில் நிபுணா் குழுவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அமைத்துள்ளது.

2026-27- ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தப் பாடப்பிரிவை 3-ஆம் வகுப்பு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பான பாடத்திட்டத்தை உருவாக்க சிபிஎஸ்இ, கேந்தரிய வித்யாலயா சங்கடன் (கேவிஎஸ்), நவோதயா வித்யாலயா சமிதி (என்விஎஸ்), தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) ஆகியவற்றின் நிபுணா்களுடன், சென்னை ஐஐடியின் தரவு அறிவியல் மற்றும் ஏஐ பேராசிரியா் காா்த்திக் ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை செயலா் சஞ்சய் குமாா் தெரிவித்தாா்.

சிந்தனை, கற்கும், பயிற்றுவிக்கும் திறனை ஏஐ, கம்ப்யூடேஷனல் திங்கிங் மேம்படுத்த உதவும் என்றும் இது மக்களின் நலனுக்காக ஏஐ பயன்பாட்டை விரிவாக்கம் செய்யவும் உதவும் என்றும் சஞ்சய் குமாா் தெரிவித்தாா்.

தற்போது சுமாா் 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் திறன் பாடமாகவும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் விருப்பப் பாடமாகவும் ஏஐ உள்ளது.

X
Dinamani
www.dinamani.com