மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள்! திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்களுக்கான திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது
மருத்துவ மாணவர்கள்
மருத்துவ மாணவர்கள்
Published on
Updated on
1 min read

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் குறித்த திருத்தப்பட்ட பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட பட்டியலின்படி, ஒட்டுமொத்த மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 50 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் குறைந்து 1,28,925-ல் இருந்து 1,28,875 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி உள்பட சில மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 11,350 மாணவர் இடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது.

முன்னதாக, புதிதாக சேர்க்கப்பட்ட இடங்கள் 11,400 ஆக இருந்ததாகக் கூறப்பட்டது. அண்மையில் வெளியான பட்டியலில், கிட்டத்தட்ட 100 இடங்கள் வேறுபாடு காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

2025 - 26ஆம் ஆண்டுக்கான பட்டியலை திருத்தும் பணியின்போது, மருத்துவக் கல்லூரிகளின் விவரங்களைப் பதிவு செய்தபோது தட்டச்சுப் பிழை நேரிட்டதாக தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவில் 819 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும் இதில் 1,28,875 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.

அதாவது, அதிகபட்சமாக கர்நாடகம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட 6 தென்னிந்திய மாநிலங்களில் 285 மருத்துவக் கல்லூரிகளும் அதில் 44,825 மாணவர் சேர்க்கை இடங்களும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் உ.பி., தில்லி உள்பட 9 மாநிலங்களில் 180 மருத்துவக் கல்லூரிகளில் 28,340 இடங்களும், மேற்கிந்திய மாநிலங்களில் 28,650 இடங்களும், கிழக்கு மாநிலங்களில் 14,875 இடங்களும், வடகிழக்கில் 3,100 இடங்களும் மத்திய இந்திய மாநிலங்களில் 9,085 இடங்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Revised list of MBBS, BDS student admission places released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com